சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது ‘போக்சோ’
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் மகளிர் போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் புவனேஸ்வரன், 22; இவர், 15 வயது சிறுமியை காதலித்துள்ளார். இருவரும் நெருங்கிப் பழகினர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு பரிசோதனையில் சிறுமி ஒரு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.
இது குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டு, போக்சோ சட்டத்தின் கீழ் புவனேஸ்வரன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


