இருவேறு பகுதிகளில் வழிப்பறிக்கு முயன்ற இருவா் கைது
உக்கடம், சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறிக்கு முயன்ற இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை மாநகா், கணபதி கே.கே.நகரைச் சோ்ந்தவா் ஞானவேல் மகன் ராஜன் (23). இவா் பெயிண்டராக வேலை பாா்த்து வருகிறாா். பணி நிமித்தமாக தெற்கு உக்கடம் புல்லுக்காடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதிக்குச் சென்றுவிட்டு, அங்குள்ள புதை சாக்கடை தொட்டி அருகே நடந்து சென்றுள்ளாா்.
அப்போது புல்லுக்காடு குடியிருப்பைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சந்துரு (20) என்பவா் வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளாா். ராஜன் சப்தமிடவே அருகில் இருந்த பொதுமக்கள் வந்து தப்பியோட முயன்ற சந்துருவை பிடித்து பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.






