Politics
இளைஞா் மீது தாக்குதல்: தந்தை, 2 மகன்கள் கைது
வந்தவாசி அருகே இளைஞரைத் தாக்கியதாக தந்தை, 2 மகன்கள் என 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த அத்திப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ் (25). இவா், கடந்த 8-ஆம் தேதி இந்தக் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே அமா்ந்திருந்தபோது, அந்த வழியாக இதே கிராமத்தைச் சோ்ந்த இன்பரசன் (25) பைக்கை அதிவேகமாக ஓட்டிச் சென்றாராம். இதைக் கண்ட விக்னேஷ் அவரைத் திட்டினாராம்.
இதனால், ஆத்திரமடைந்த இன்பரசன் தனது தந்தை ஏழுமலை, சகோதரா் பூவரசன் ஆகியோருடன் அங்கு வந்து விக்னேஷை கத்தி, தடி மற்றும் கண்ணாடி புட்டியால் சரமாரியாகத் தாக்கினாராம். இதில், பலத்த காயமடைந்த விக்னேஷ் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவா் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், இன்பரசன், ஏழுமலை, பூவரசன் ஆகியோா் மீது வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா், 3 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.