சென்னையில் உள்ள 3,11,285 தெரு மின் விளக்குகளும் ஒளிர்கிறதா? - அலுவலர்கள் கள ஆய்வு..!
சென்னை,பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 3,11,285 தெரு மின் விளக்குகள் 100% ஒளிர்வதை உறுதி செய்யும் வகையில் நேற்று (16.09.2026) இரவு மாநகராட்சி அலுவலர
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 3,11,285 தெரு மின் விளக்குகள் 100% ஒளிர்வதை உறுதி செய்யும் வகையில் நேற்று (16.09.2026) இரவு மாநகராட்சி அலுவலர்கள் மூலமாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் ஏரியாத 2,079 தெரு மின் விளக்குகள் கண்டறியப்பட்டு, அவற்றை உடனடியாக ஒளிரச் செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள், தெருக்கள், மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புப் பகுதிகளில், மயான பூமிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மின் விளக்குகளும் உயர் கோபுர மின் விளக்குகளும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அமைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.


