சென்னை மாநகர பகுதிகளில் 2,079 மின் விளக்குகள் சீரமைப்பு
சென்னை, செப். 18– சென்னையில் எரியாத, 2,079 தெரு மின் விளக்குகள் கண்டறியப்பட்டு, சரி செய்யப்பட்டுள்ளன. சென்னை
சென்னையில் எரியாத, 2,079 தெரு மின் விளக்குகள் கண்டறியப்பட்டு, சரி செய்யப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சியில், 3.11 லட்சம் தெரு மின் விளக்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில், எரியாத மின் விளக்குகள் கண்டறிந்து சரி செய்யப்பட்டு வருகின்றன.
மழைநீர் வடிகால் பணி, மெட்ரோ ரயில் நிறுவனம் பணி, சென்னை குடிநீர் மற்றும் கழிவு வாரிய பணிகள் மேற்கொள்ளும் இடங்களில், 850 தெரு மின் விளக்குகள் எரியவில்லை.
அதேபோல், புதை மின்வட பழுதினால், 230, தெரு மின் விளக்குகள், 999 என, 2,079 கண்டறியப்பட்டன. இதில், சேவை துறைகளின் பணிகள் நடைபெறும் இடங்களில், தற்காலிக மின் விளக்குகள் அமைக்கப்பட்டு, சரி செய்யப்பட்டன. மின் விளக்குகள் தொடர்பாக பொதுமக்கள், 1913 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.