தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளாரே அஜித்... அந்துமணி பதில்கள்!
@block_P@செ.காமாட்சி, திருப்பூர்: தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளாரே, நடிகர் அஜித்?
நடிகர், ஒரு கார் ரேஸ் பிரியர். பல நாடுகளுக்கு சென்று, அங்கு நடக்கும் கார் ரேஸில் பங்கேற்று, பல பரிசுகளையும் பெறுபவர். நமது அரசு, 'உலக தரத்தில் கார் ரேஸ் மைதானம் அமைக்கப்படும்...' என அறிவித்ததால், அஜித் நன்றி கூறியுள்ளார்!
சாதனை செய்வது பெரிதல்ல. தேவையற்ற விஷயங்களைப் பேசி, சபையின், எம்.எல்.ஏ.,க்களின் நேரத்தை வீணடிக்காமல், நல்லாட்சி நடக்க வேண்டும் என்பது தான், மக்களின் விருப்பம்!
'சட்டம் - ஒழுங்கு சீர்குலையவில்லை. தனிப்பட்ட குற்ற சம்பவங்களை வைத்து, எந்த முடிவுக்கும் வரக் கூடாது...' என கூறியுள்ளார். சமுதாயக் காவல் என்ற முறையில், பொதுமக்களும், காவல்துறையுடன் கைகோர்த்து, சட்டம் - ஒழுங்கை சீர்படுத்தும் நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும்!


