தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளாரே அஜித்... அந்துமணி பதில்கள்!
@block_P@செ.காமாட்சி, திருப்பூர்: தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளாரே, நடிகர் அஜித்?

நடிகர், ஒரு கார் ரேஸ் பிரியர். பல நாடுகளுக்கு சென்று, அங்கு நடக்கும் கார் ரேஸில் பங்கேற்று, பல பரிசுகளையும் பெறுபவர். நமது அரசு, 'உலக தரத்தில் கார் ரேஸ் மைதானம் அமைக்கப்படும்...' என அறிவித்ததால், அஜித் நன்றி கூறியுள்ளார்!
சாதனை செய்வது பெரிதல்ல. தேவையற்ற விஷயங்களைப் பேசி, சபையின், எம்.எல்.ஏ.,க்களின் நேரத்தை வீணடிக்காமல், நல்லாட்சி நடக்க வேண்டும் என்பது தான், மக்களின் விருப்பம்!
'சட்டம் - ஒழுங்கு சீர்குலையவில்லை. தனிப்பட்ட குற்ற சம்பவங்களை வைத்து, எந்த முடிவுக்கும் வரக் கூடாது...' என கூறியுள்ளார். சமுதாயக் காவல் என்ற முறையில், பொதுமக்களும், காவல்துறையுடன் கைகோர்த்து, சட்டம் - ஒழுங்கை சீர்படுத்தும் நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும்!
பல மாணவர்களின் ஆராய்ச்சிக்கு உதவும், ஊழல் பட்டியல் இது. அப்படி செய்தால், இன்னும் எவ்வளவு புதிய பூதங்கள் கிளம்புமோ, கருணாநிதிக்கே வெளிச்சம்!
இன்பநிதி, அவரது தந்தை உதயநிதியை பார்த்தாவது துண்டு சீட்டோ, பக்கம் பக்கமாக எழுதி வைத்து பேசுவது தவறு என்று உணர்ந்து, அவரது கொள்ளு தாத்தா கருணாநிதியைப் போல், அருமையான தமிழில், சரளமாக பேச கற்றுக் கொண்டு அரசியலுக்கு வரட்டும்!
மருத்துவர்களின் சேவை மகத்தானது. அவர்கள், உயிர் காக்கும் பணி செய்பவர்கள். அவர்களுக்கே பாதுகாப்பு இல்லாமல் போவது வேதனையே. சுப்ரீம் கோர்ட் உத்தரவு சரியானதே!
நம்மூரில் இன்னும் பலர் வேப்பங்குச்சியும், சாம்பலையும் உபயோகப்படுத்தி பற்களை ஆரோக்கியமாக வைத்துள்ளனரே... டைசன் நிறுவனத்திற்கு தெரிந்தால், அதையும் விற்பனைக்கு கொண்டு வந்து விடுவர்!
சினிமாவிலிருந்து, அரசியலுக்கு வந்தவர்கள் என்ற வகையில், அப்படி கூறியிருப்பார் கண்மணி. வேறு எந்த எண்ணத்திலும் இருக்காது; அவ்வளவு அவசர படமாட்டார் விஜய்!
அவரது பாணி அரசியலுக்கு, தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார் வைகோ!