முதியவரின் சொத்தை மோசடி செய்த தாய் ,மகன் உள்ளிட்ட கும்பல் மீது வழக்கு
: புதுச்சேரி: முதியவரின் சொத்தை பத்திரபதிவு மூலம் மாற்றி மோசடி செய்த மகன் மற்றும் தாய் உள்ளிட்ட கும்பல் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டை முருகேசன் நகரை சேர்ந்தவர் குமாரசாமி, 65; இவரின் மகள் திருமண செலவிற்காக, லாஸ்பேட்டை நிவாஸ் அபார்ட்மென்ட் பகுதியை சேர்ந்த தற்போது பிரான்சில் இருக்கும் கணேஷ் என்பவரிடம் இருந்து 30 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார்.
குமாரசாமி கடன் வாங்கியதற்காக, காமராஜர் நகரில் உள்ள தனது சொத்தை, பொது அதிகாரப்பத்திரம் மூலம் கணேஷ் பெயருக்கு, கடந்த 2022ம் ஆண்டு உழவர்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் பவர் கொடுத்தார்.

