தலைமையாசிரியரை சரமாரி தாக்கிய பிளஸ் 2 மாணவர்கள்: திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் பரபரப்பு
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் அறைக்குள் புகுந்து, பிளஸ் 2 மாணவர்கள் ஏழு பேர், அவரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர், நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கர்னல், 54. அவர், நேற்று தன் அறையில் அமர்ந்து, பள்ளிக்கு தொடர்ந்து வராமல், நேரடியாக தேர்வுக்கு வந்த மாணவர்களிடம், 'ஏன் இவ்வளவு நாட்களாக பள்ளிக்கு வரவில்லை?' என கேட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென அவரது அறைக்குள் புகுந்த பிளஸ் 2 மாணவர்கள் ஏழு பேர், தலைமை ஆசிரியரை சரமாரியாக தாக்கினர்.

