Arts, culture, entertainment and media
தலைமை ஆசிரியரை தாக்கிய 6 மாணவர்கள் மீது வழக்கு
திருப்பூர்: பள்ளி தலைமையாசிரியர் கர்னல், 54, என்பவரை தாக்கிய பிளஸ் 2 மாணவர்கள், ஆறு பேர் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர்.
திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கர்னல், 54. நேற்று முன்தினம், பள்ளிக்கு தொடர்ந்து வராமல் நேரடியாக தேர்வுக்கு வந்த மாணவர்களிடம், 'ஏன் பள்ளிக்கு வரவில்லை?' என கேட்டார்.
அறைக்குள் புகுந்த பிளஸ் 2 மாணவர்கள் சிலர், கர்னலை தாக்கிவிட்டு தப்பினர். முகத்தில் காயமடைந்த கர்னலுக்கு, ஆசிரியர்கள் முதலுதவி அளித்தனர். திருப்பூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், பள்ளிக்கு சரியாக வராத மாணவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க, கர்னல் திட்டமிட்டிருந்த நிலையில், தாக்குதல் நடந்தது தெரிந்தது.
இதையடுத்து, போலீசார், பிளஸ் 2 மாணவர்கள் ஆறு பேர் மீது, வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.