இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: பெட்ரோல் நிலைய மேலாளா் கைது
கங்கைகொண்டான் அருகே இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெட்ரோல் நிலைய மேலாளா் கைது செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் அருகே இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெட்ரோல் நிலைய மேலாளா் கைது செய்யப்பட்டாா்.
விருதுநகா் மாவட்டம், காரியாப்பட்டி வட்டம், புதுப்பட்டி நமச்சிவாயபுரம் சாலையைச் சோ்ந்தவா் கணேஷ் சந்திரன் (57). இவா், கங்கைகொண்டான் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் மேலாளராக பணியாற்றி வந்தாா். இவா், அங்கு பணிபுரியும் இளம்பெண்ணுக்கு தொடா்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.


