பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு; பெட்ரோல் பங்க் மேலாளர் கைது

திருநெல்வேலி: கங்கைகொண்டானில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பெட்ரோல் பங்க் மேலாளர் கணேஷ் சந்திரன் 57, கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி தாலுகா புதுப்பட்டியை சேர்ந்த இவர், திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் உள்ள பெட்ரோல் பங்கில் மேலாளராக பணியாற்றி வந்தார். அங்கு பணிபுரியும் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இது குறித்த புகாரில் கங்கைகொண்டான் போலீசார் கணேஷ் சந்திரனை கைது செய்தனர்.