ஆரோவில்லில் கட்டப்பட்ட அருங்காட்சியகம் புதுச்சேரி அரசு அதிகாரிகள் ஆய்வு
வானுார்: மகான் அரவிந்தரின், 150 வது பிறந்த நாளையொட்டி அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மெய் நிகர் அருங்காட்சியக கட்டடத்தை புதுச்சேரி அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சர்வதேச நகரமான ஆரோவிலில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவியின் முன்னெடுப்பில், பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மகான் அரவிந்தரின் கடந்த, 150வது பிறந்த நாளையொட்டி, ஆரோவில் அறக்கட்டளை, புதுச்சேரி அரசு மற்றும் மத்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் கூட்டு முயற்சியில், மத்திய பொதுப்பணித்துறை மூலம் புதியதாக அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மெய்நிகர் அருங்காட்சியக கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த மெய்நிகர் அருங்காட்சியகத்தை, புதுச்சேரி தலைமை செயலாளர் சரத் சவுகான், அரசு செயலாளர் முத்தம்மா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


