சின்னசேலத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் வரும் 23–ல் நடக்கிறது
கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் வரும் 23–ல் நடக்கிறது.
இதுகுறித்து கலெக்டர் பத்மஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் சின்னசேலம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும் 23ம் தேதி புதன்கிழமை காலை 9:30 மணிக்கு நடக்கிறது.

