மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று சிறப்பு முகாம்
வால்பாறை: வால்பாறையில் இன்று (18ம் தேதி) மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடக்கிறது.
மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பல்வேறு அரசு துறைகள் ஒருங்கிணைந்து, சிறப்பு முகாம் நடத்துகிறது.
வால்பாறை நகராட்சி சமுதாய நலக்கூடத்தில் காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை சிறப்பு முகாம் நடக்கிறது. முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் தங்களது ஆதார் அட்டை, ரேஷன் கார்டு மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொண்டு வர வேண்டும்.
