மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று சிறப்பு முகாம்
வால்பாறை: வால்பாறையில் இன்று (18ம் தேதி) மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடக்கிறது.
மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பல்வேறு அரசு துறைகள் ஒருங்கிணைந்து, சிறப்பு முகாம் நடத்துகிறது.
வால்பாறை நகராட்சி சமுதாய நலக்கூடத்தில் காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை சிறப்பு முகாம் நடக்கிறது. முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் தங்களது ஆதார் அட்டை, ரேஷன் கார்டு மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொண்டு வர வேண்டும்.
மேலும் முகாமில் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, கல்வி உதவித்தொகை, பராமரிப்பு உதவித்தொகை, வங்கி கடன் உதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன. மாற்றுத்திறனாளிகள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.