ரயில் டிக்கெட் முன்பதிவு ரத்து :வால்பாறையில் மக்கள் ஏமாற்றம்
வால்பாறை: வால்பாறை அஞ்சலகத்தில், மீண்டும் ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை தலைமை அஞ்சலகத்தில் வாடிக்கையாளர் வசதிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, தங்கமகள் சேமிப்பு திட்டம், இன்சுரன்ஸ், ஆதார் உள்ளிட்ட சேவைகள் சிறப்பாக செயல்படுகின்றன.
ஆனால், வாடிக்கையாளர் பயன்பாட்டிற்காக கடந்த, 2022ல் துவங்கப்பட்ட ரயில் டிக்கெட் முன்பதிவு கடந்த ஆண்டு திடீரென நிறுத்தப்பட்டது.