அக்., 2ல் மாநில செஸ் போட்டி வீரர், வீராங்கனைகளுக்கு அழைப்பு
நாமக்கல்:'அக்., 2ல், இரண்டாவது மாநில அளவிலான ஓபன், குழந்தைகள் செஸ் திருவிழா, குமாரபாளையத்தில் நடக்கிறது' என, ஏ.ஐ.எம்., நிறுவனர் ஐயப்பன் தெரிவித்துள்ளார்.
ஏ.ஐ.எம்., செஸ் அகாடமி மற்றும் பவானி ஈஸி செஸ் அகாடமி சார்பில், தமிழ்நாடு ப்ரீஸ்டைல் செஸ் கூட்டமைப்பு அங்கீகாரத்துடன், இரண்டாவது மாநில அளவிலான ஓபன் மற்றும் குழந்தைகள் செஸ் திருவிழா, வரும் அக்., 2ல், குமாரபாளையம், ஐன்ஸ்டீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடக்கிறது.
போட்டிகள், 8, 11, 15 வயதுக்குட்பட்டோர், பெரியவர் பிரிவு ஆகிய, நான்கு பிரிவுகளில் நடக்கிறது. குழந்தைகள் பிரிவுகளில், சிறுவர், சிறுமியருக்கு தனித்தனியாக போட்டி நடத்தப்படும். பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும், பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும்.

