Sport
அக்., 2ல் மாநில செஸ் போட்டி வீரர், வீராங்கனைகளுக்கு அழைப்பு
நாமக்கல்:'அக்., 2ல், இரண்டாவது மாநில அளவிலான ஓபன், குழந்தைகள் செஸ் திருவிழா, குமாரபாளையத்தில் நடக்கிறது' என, ஏ.ஐ.எம்., நிறுவனர் ஐயப்பன் தெரிவித்துள்ளார்.
ஏ.ஐ.எம்., செஸ் அகாடமி மற்றும் பவானி ஈஸி செஸ் அகாடமி சார்பில், தமிழ்நாடு ப்ரீஸ்டைல் செஸ் கூட்டமைப்பு அங்கீகாரத்துடன், இரண்டாவது மாநில அளவிலான ஓபன் மற்றும் குழந்தைகள் செஸ் திருவிழா, வரும் அக்., 2ல், குமாரபாளையம், ஐன்ஸ்டீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடக்கிறது.
போட்டிகள், 8, 11, 15 வயதுக்குட்பட்டோர், பெரியவர் பிரிவு ஆகிய, நான்கு பிரிவுகளில் நடக்கிறது. குழந்தைகள் பிரிவுகளில், சிறுவர், சிறுமியருக்கு தனித்தனியாக போட்டி நடத்தப்படும். பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும், பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும்.
இப்போட்டியில், மொத்தம், 324 பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இதில், 95 கோப்பைகள், 29 ரொக்க பரிசுகள் மற்றும் 200 பதக்கங்கள் அடங்கும். பெரியவர் பிரிவில், 4,000, 2,500, 2,000 ரூபாய் என, 20-வது இடம் வரை பரிசு வழங்கப்படும்.
தமிழகம் முழுவதும் உள்ள செஸ் வீரர்கள், பள்ளிகள், செஸ் அகாடமிகள் மற்றும் செஸ் சங்கங்கள் அதிக அளவில் பங்கேற்கலாம். விபரங்களுக்கு, அமைப்பாளர் ராமசாமியை, 9360410607 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.