சிப்காட் சாலையில் வரிசைக்கட்டி நிற்கும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்
ஸ்ரீபெரும்புதுார்: எறையூர் சிப்காட் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் தொழிற்சாலை வாகனங்களால், அவ்வழியாக செல்லும் கிராம மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் 200க்கும் அதிகமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதன் ஒருபகுதியான, எறையூர், வைப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.
இந்த சிப்காட் சாலைகளின் வழியாகவே, மேற்கூறிய கிராமத்தின் பல்வேறு தேவைகளுக்காக படப்பை, தாம்பரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

