ஏரிகளை ஆக்கிரமித்தால் கிரிமினல் வழக்கு பாயும் அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே எச்சரிக்கை
பெங்களூரு: ''கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஏரிகளை ஆக்கிரமிப்போர் மீது, கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும். தயவு தாட்சண்யமின்றி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்,'' என, கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே எச்சரித்தார்.
கர்நாடகா, நாட்டிலேயே இரண்டாவது மிக அதிகமான வறண்ட நிலம் உள்ள மாநிலமாகும். கிராமப்புற மக்களுக்கு குடிநீர் வழங்குவது, பெரும் சவாலான விஷயமாகும்.
மாநிலத்தின் கிராம பஞ்சாயத்து கட்டுப்பாட்டில், 32,504 ஏரிகள் உள்ளன. இவற்றில் 11,498 ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. 6,670 ஏரிகளின் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. மேலும், 4,828 ஏரிகளின், 11,671 ஏக்கர் ஆக்கிரமிப்பை அகற்றினோம்.


