ஆந்திர முன்னாள் துணை முதல்வர் காலமானார்
ஆந்திர மாநில துணை முதல்வர் காளி கிருஷ்ண ஸ்ரீனிவாஸ் மறைவு குறித்து...
ஆந்திர மாநில முன்னாள் துணை முதல்வர் காளி கிருஷ்ண ஸ்ரீனிவாஸ் என்னும் அல்லா நானி மாரடைப்பு காரணமாக இன்று (செப். 15) காலமானார். அவருக்கு வயது 57.
காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய இவர், 2004 மற்றும் 2009 ஆண்டு தேர்தலில் ஏலூரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பிறகு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்து, 2014 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டார். எனினும் இதில் தோல்வி அடைந்தார்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)




