சென்னை எம்.ஜி.ஆர். பல்கலை. பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் - நயினார் நாகேந்திரன் மகிழ்ச்சி
சென்னை,சென்னை எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டது மகிழ்ச்சி என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது
சென்னை எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டது மகிழ்ச்சி என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக, தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்ததாவது:-
இன்றைய தினம் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 36-ஆவது பட்டமளிப்பு விழாவில், மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சிதாராமன் கலந்து கொண்டு, பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கியதில் பெரும் மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைந்தேன்.
இந்நிறுவனத்தின் தலைவரும், புதிய நீதிக் கட்சியின் நிறுவன தலைவருமான ஏ.சி. சண்முகம், தொடர்ந்து பல ஆண்டுகளாக கல்வி சேவையில் ஈடுபட்டு, எளிய குடும்பங்களை சேர்ந்த பல மாணவர்களின் கல்வி கனவுகளை நனவாக்கி வருவதற்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.



