“துப்பாக்கியை வாயில் திணித்தார்கள்... பூட்ஸ் காலால் மிதித்தார்கள்!”
“72 கிலோ எடையுடன் இருந்த என் மகன் இப்போது 42 கிலோவாகிவிட்டான். ஒரு நாளைக்கு 30 முறைக்கும் மேல் ரத்தம் வெளியேறுகிறது. அவன் உயிர் பிழைப்பானா என்பதே தெரியவில்லை...” என்று கதறுகிறார் ரவிச்சந்திரன்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டிக்கு அருகேயுள்ள செந்தாரைப்பட்டியைச் சேர்ந்த பைக் மெக்கானிக் ரவிச்சந்திரன். இவரின் மகன் அஜய், 9-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு கூலி வேலை செய்துவந்திருக்கிறார். ஜூலை 20-ம் தேதி முதல் அஜய்யைக் காணவில்லை. அப்போது, திருட்டு வழக்கு தொடர்பாக அஜய்யை தம்மம்பட்டி காவல் நிலையத்தில் அடைத்து வைத்திருப்ப தாகத் தகவல் கிடைத்திருக்கிறது. “அஜய்யைப் பார்க்க, காவல் நிலையத்துக்குச் சென்ற என்னை ஒரு காவலர் கன்னத்தில் அறைந்தார். பார்வைக் குறைபாடு காரணமாக லென்ஸ் வைத்திருப்பதாகத் தெரிவித்தும், மீண்டும் கன்னத்தில் அறைந்ததால் லென்ஸ் பாதிக்கப்பட்டது” என்ற ரவிச்சந்திரன், “அஜய்க்கு நடந்த கொடூரமும் கொஞ்ச நஞ்சமல்ல” என்று அது குறித்து விவரித்தார்...
“திருச்சி பகுதியைச் சேர்ந்த கொள்ளைக் கும்பல் ஒன்று தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நகை, பணத்தைப் பறித்துச் சென்றிருக்கிறது. இதில் என்னுடைய மகனுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி தம்மம்பட்டி காவல்துறையினர் அவனை அழைத்துச் சென்றனர். மூன்று நாள்கள் யாருக்கும் தெரியாமல் காவல் நிலையத்தில் அடைத்துவைத்தனர்.


