தெப்பக்காடு சாலையில் வாகனங்கள் நெரிசல் சுற்றுலா பயணியர் அதிருப்தி
கூடலூர்: முதுமலை -- தெப்பக்காடு சாலையில், வார விடுமுறை நாட்களில் வாகன நெரிசலால் சுற்றுலா பயணியர் அதிருப்தி அடைந்தனர்.
முதுமலை, மசினகுடி - கல்லட்டி சாலையில் வாகன விபத்துகளை தடுக்கவும், வனவிலங்குகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உள்ளூர் வாகனங்களை தவிர்த்து, ஊட்டியில் இருந்து முதுமலைக்கு சுற்றுலா வாகனங்கள் இயக்க ஏற்கனவே தடை உள்ளது.
தொடர்ந்து, ஐகோர்ட் உத்தரவுபடி, வனத்துறையினர் மாவனல்லா பகுதியில், கடந்த வாரம் முதல் சோதனை சாவடி அமைத்து, தினமும் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை, 200 சுற்றுலா வாகனங்களை மட்டும் அனுமதித்தனர். வார விடுமுறையை ஒட்டி, சுற்றுலா வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், கல்லட்டி சாலையில் இரண்டு மணி நேரத்தில், 200 வாகனங்கள், சோதனை சாவடியை கடந்து சென்று விடுகிறது.


