தஞ்சையில் தண்ணீருக்கு தவிக்கும் கிராமம் குடங்களுடன் அலைந்து திரியும் மக்கள்
தஞ்சாவூர்: பூதலுார் அருகே பெண்கள் மொத்தமாக சேர்ந்து லோடு ஆட்டோ வாடகைக்கு எடுத்து, 3 கி.மீ., துாரம் சென்று குடிநீர் பிடித்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலுார் அருகே வீரபுடையான்பட்டி கிராமத்தில், 900 பேர் உள்ளனர். இக்கிராமத்தில் குடிநீர் பிரச்னை பல ஆண்டுகளாக நிலவி வருகிறது.
இதனால், ஆண்கள் பைக்கில் குடங்களை எடுத்து சென்றும், பெண்கள் சிலர் மொத்தமாக சேர்ந்து லோடு ஆட்டோவை வாடகைக்கு எடுத்துக்கொண்டும், தங்கள் கிராமத்தில் இருந்து 3 கி.மீ., துாரம் உள்ள செல்லப்பன்பட்டி, ஆவாரம்பட்டி, பூதலுார் பகுதிகளுக்கு சென்று தண்ணீரை பிடித்து வருகின்றனர்.

