ராணுவ கல்லுாரி தேர்வில் ஆள்மாறாட்டம்: மூவர் கைது
குன்னுார்: ராணுவ கல்லுாரி தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வடமாநிலத்தை சேர்ந்த மோஹர் சிங், 21, உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம், குன்னுார் ராணுவ பயிற்சி கல்லுாரியில், செப்., 3ம் தேதி, எழுத்தர், தொழில்நுட்பம் உட்பட, 10 பிரிவுகளுக்கான எழுத்து தேர்வு நடந்தது. தேர்வு அறையில் கண்காணிப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஒரே அறையில் தேர்வு எழுதிய, உத்தரபிரதேச மாநிலம், ஆக்ராவை சேர்ந்த மோஹர் சிங், 21, ரோகிதாஸ், 24, ஆகியோர் மீது சந்தேகம் எழுந்தது.
விசாரணையில், இருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அமராமல், தங்களின் ஆதாரங்களை மாற்றி வைத்து தேர்வு எழுதியது தெரிந்தது. ஆக்ராவை சேர்ந்த நரேஷ்குமார், 19, என்ற இளைஞர் அதே முக த் தோற்றம் கொண்ட வேறு ஒருவருக்காக வந்து, ஆள்மாறாட்டம் செய்தது 'பயோமெட்ரிக்' சோதனையில் உறுதியானது.
