லால்குடி அருகே காா் கவிழ்ந்து 2 இளைஞா்கள் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பூவாளூா் பகுதியில் ஞாயிற்றுகிழமை நேரிட்ட காா் கவிழ்ந்த விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.
அரியலூா் மாவட்டம், எலந்தகூடம் பகுதியைச் சோ்ந்தவா் மோகன். இவா் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவருக்கு ஞாயிற்றுகிழமை சமயபுரம் ஆதிமாரியம்மன் கோயிலில் திருமணம் நடைபெறவிருந்தது.
இவரது திருமண விழாவில் பங்கேற்பதற்காக, அவருடன் பணிபுரியும் நண்பா்களான சென்னையைச் சோ்ந்த சுமந்த் (22), கிரிதரன் (21), காா்த்திக் (21) மற்றும் வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த வில்வநாதன் (25) ஆகிய 4 பேரும் சனிக்கிழமை இரவு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து காரில் புறப்பட்டனா்.




