கார் கவிழ்ந்து விபத்து சென்னை வாலிபர்கள் பலி

திருச்சி: கார் கவிழ்ந்த விபத்தில், சென்னையைச் சேர்ந்த வாலிபர்கள் சுமந்த், 22, விஸ்வநாதன், 25, ஆகியோர் உயிரிழந்தனர்.
அரியலுார் மாவட்டம் எலந்தகு ளத்தை சேர்ந்தவர் மோகன். 24. இவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
திருச்சி மாவட்டம், சமயபுரத்தில், நேற்று காலை மோகனின் திருமணம் நடந்தது. இதில், கலந்துகொள்ள அவருடன் பணியாற்றிய நண்பர்களான, சென்னையைச் சேர்ந்த சுமந்த், கிரிதரன், 21, கார்த்திக், 21, விஸ்வநாதன், ஆகியோர், காரில் சென்றனர்.
திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில், லால்குடி அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், தலைகுப்புற கவிழ்ந்தது. இதில், காரை ஓட்டி வந்த சுமந்த், பின்னால் அமர்ந்திருந்த விஸ்வநாதன் உயிரிழந்தனர்.
கார்த்திக், கிரிதரன் உயிருக்கு ஆபத்தானநிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். லால்குடி போலீசார், விசாரித்து வருகின்றனர்.