மும்பை விமான நிலையத்தில் பயணிகள் பேக்கில் தொடரும் பணம், நகை திருட்டு! குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை
The Crime Branch police have formed a special team to arrest individuals who have been repeatedly stealing cash and jewelry from passengers' bags at Mumbai Airport.
மும்பை விமான நிலையத்தில் பயணிகளின் பேக்கில் இருந்து தொடர்ந்து பணம் மற்றும் நகைகளை திருடும் நபர்களை கைது செய்ய குற்றப்பிரிவு போலீஸார் தனிப்படையை அமைத்துள்ளனர்.
மும்பை விமான நிலையத்தில் பயணிகளின் பேக்கில் இருந்து அடிக்கடி திருட்டு நடக்கிறது. சமீபத்தில் மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற மாணவர் ஒருவரின் பேக்கில் இருந்து 5 ஆயிரம் அமெரிக்க டாலர் திருட்டு போனது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் நடப்பு ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி வரை மும்பை விமான நிலையத்தில் 27 திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன.
இதில் 22 வழக்கு மும்பை சஹார் போலீஸ் நிலையத்திலும், 5 விமான நிலைய போலீஸ் நிலையத்திலும் விசாரணையில் உள்ளன. ஆனாலும் இதில் இதுவரை துப்பு துலங்கவில்லை.

