செய்யறிவைக் கட்டுப்படுத்து! தெருவில் இறங்கிப் போராடிய ரோபோக்கள்! என்ன நடக்கிறது?
செய்யறிவைக் கட்டுப்படுத்து என்ற கோஷத்துடன் தெருவில் இறங்கி போராடிய ரோபோக்களின் விடியோ
போலந்து நாட்டின் டிஜிட்டல் விவகாரத் துறை அலுவலக வாயிலில், மனிதர்களின் வேலைகளைக் காப்பாற்றும் வகையில் செய்யறிவுப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோஷமெழுப்பியவாறு ரோபோ மனிதர்கள், நாய் வடிவ ரோபோக்கள் கையில் கொடிகளைப் பிடித்துக் கொண்டு போராட்டத்தில் இறங்கியுள்ளன.
செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்த வேண்டும், அதன் பயன்பாடு குறித்த கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று ரோபோக்களே போராடுகின்றன என்ற செய்தியைப் பார்க்கும்போது சற்று குழப்பம் நேரிடலாம். ஆனால் அது உண்மைதான். போலந்து நாட்டில் நடந்துள்ளது. கிட்டத்தட்ட 30 ரோபோக்கள் போலந்து நாட்டின் வர்சா மாவட்டத்தில் உள்ள மத்திய அரசு அலுவலக வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டன.

