மனிதர்களுக்காக ரோபோ போராட்டம்
செயற்கை நுண்ணறிவு மனித குலத்துக்கு பெரும் ஆபத்தாகிவிடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், மனிதர்களின் வேலையை காப்பாற்றும் வகையில், செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை கட்டுப்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது. மனிதர்களுக்காக பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட மனித உருவ ரோபோ, நாய் வடிவ ரோபோக்கள். இடம்: வார்சா, போலந்து.