போலந்து வேலையை துாக்கி எறிந்தார் குப்பனுார் நிலத்தை குத்தகைக்கு எடுத்தார்!
இந்த தொழில்நுட்ப யுகத்தில் விவசாயத்தில் ஈடுபடும் இளைஞர்கள் குறைவு. அதுவும், வெளிநாட்டில் ரூ.3 லட்சம் சம்பளத்தில் வேலை பார்த்து வந்த 36 வயது இளைஞர், அந்த வேலையை உதறி விட்டு இயற்கை விவசாயத்தில் அசத்தி வருவது பெரிய விஷயம்தானே!
மாதம்பட்டி அருகே உள்ள குப்பனூர் பகுதியை சேர்ந்தவர் இவர். பெயர் விஜயன். சொந்த ஊர் சேலம் மாவட்டம் மேட்டூர். எம்.டெக் படித்துவிட்டு போலந்தில் வேலை பார்த்து வந்த இவர், இயற்கை விவசாயி ஆக மாறி கலக்கி வருகிறார்.
''பள்ளி காலத்தில் இருந்தே விவசாயம் என்றால் பிடிக்கும். இன்று விவசாயிகள் நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள். அதில் மாற்றம் கொண்டு வர விரும்பி வேலையை ராஜினாமா செய்து, 2021ம் ஆண்டு முதல் இயற்கை விவசாயம் செய்கிறேன்.

