கவுண்டம்பாளையம் தொகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை; அமைச்சர் அருண்ராஜ் மற்றும் எம்.எல்.ஏ கனிமொழி ஆய்வு
கோவை ,கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 23-வது வார்டு சித்ரா பகுதி சவுபாக்கியா நகரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம
கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 23-வது வார்டு சித்ரா பகுதி சவுபாக்கியா நகரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை அமைச்சர் அருண்ராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொசு மருந்து அடித்தல், தூய்மை பணிகள் மற்றும் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் அருண்ராஜ் தீவிரமாக கண்காணித்தார். வீடுகளில் கொசு புழுக்கள் உற்பத்தியாகிறதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


