“தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு குறைந்துவருகிறது” – அமைச்சர் அருண்ராஜ்

டெங்கு பாதிப்பு குறைந்து வருகிறது என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட சௌபாக்கியா நகரில் டெங்கு மற்றும் மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் உள்ள மக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று மாநகராட்சி பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, முறையாக தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில், இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார். அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அமைச்சர் அருண்ராஜ் ஆலோசனை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக மிகப் பெரிய வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
