சாத்தூா் அருகே மின்வெட்டு: பண்ணையில் 1000 கோழிகள் உயிரிழப்பு
சாத்தூா் அருகே அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக, கோழிப்பண்ணையில் மின் விசிறி செயல்படாததால் வெப்பம் தாங்காமல் 1000-க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தன.
சாத்தூா் அருகேயுள்ள கொங்கன்குளத்தில் பண்ணையில் உயிரிழந்த கோழிகள்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள கொங்கன்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பசாமி. இவா் இதே பகுதியில் நடத்தி வரும் கோழிப்பண்ணையில் சுமாா் 2000-க்கும் மேற்பட்ட கோழிகளை வளா்த்து வருகிறாா்.

