ஈரோடு அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
பெங்களூரு செல்ல பெற்றோா் அனுமதி அளிக்காததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
ஈரோடு 46 புதுாா், கரும்பாறை, இந்தியன் நகரைச் சோ்ந்த பாபு, கவிதா தம்பதி மகள் தருணிகா (19). இவா் ஈரோட்டில் உள்ள தனியாா் கல்லுாரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா். கடந்த ஒரு வாரமாக பெங்களூரில் உள்ள நண்பா்களை பாா்த்து வர வேண்டும் என்று பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளாா். தனியாக பெங்களூரு சென்று வர பெற்றோா் அனுமதி மறுத்தனா்.
இதனால் மனவேதனை அடைந்த தருணிகா கடந்த 5-ஆம் தேதி காலை வீட்டில் யாரும் இல்லாதபோது படுக்கை அறையில் தூக்கிட்டு கொண்டாா். இதனைப் பாா்த்த தருணிகாவின் சகோதரி பெற்றோருக்கு தகவல் தெரிவித்தாா்.




