திருமணத்துக்கு வற்புறுத்தல் :கல்லுாரி மாணவி தற்கொலை
காட்பாடி: காட்பாடி அருகே, திருமணத்திற்கு பெற்றோர் வற்புறுத்தியதால், கல்லுாரி மாணவி ஜீவிதா, 20, தற்கொலை செய்து கொண்டார்.
வேலுார் மாவட்டம், சோமநாதபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 60. ஓய்வு பெற்ற வனகாவலர். இவரது மனைவி லட்சுமி, 44. தம்பதியரின் மகள் ஜீவிதா, வேலுாரில் உள்ள தனியார் கல்லுாரியில் மூன்றாமாண்டு படித்தார்.
இந்நிலையில், ஜீவிதாவிற்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், பெற்றோர் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளனர்.
இதனால், மனவேதனையடைந்த ஜீவிதா, நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த மேல்பாடி போலீசார், ஜீவிதா சடலத்தை மீட்டு, வேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.