நாமக்கல் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி
நாமக்கல் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி - டிஎன்எஸ்
நாமக்கல்: நாமக்கல் அருகே புதன்கிழமை அதிகாலை 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அருகே மொலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், தங்களது காரில், பெங்களூருவில் இருந்து சொந்த ஊரான கரூர் நோக்கி சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்து கொண்டிருந்தனர். அப்போது, திருச்செந்தூர் சென்று விட்டு பெங்களூரூ நோக்கி மற்றொரு குடும்பத்தினர் எதிர்புற சாலையில் திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் கரூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.



