பல்கலை மண்டல பூப்பந்தாட்டம் லயோலா கல்லுாரி ‘சாம்பியன்’
சென்னை: சென்னை பல்கலையின் ‘ஏ’ மண்டல பூப்பந்தாட்டம் எனும் பால் பேட்மின்டன் போட்டியில், லயோலா கல்லுாரி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
சென்னை பல்கலையின், ‘ஏ’ மண்டல பால் பேட்மின்டன் போட்டி, மேடவாக்கத்தில் உள்ள காயிதே மில்லத் கலை கல்லுாரியில் நேற்று நிறைவடைந்தது.
போட்டியில், மண்டலத்திற்கு உட்பட ஆறு கல்லுாரிகள் மோதின. இறுதிப்போட்டியில், விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லயோலா கல்லுாரி, எஸ்.ஆர்.எம்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அணியை 2 – 1 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.

