கள்ளக்குறிச்சி நகராட்சியில் வளர்ச்சி பணி: கலெக்டர் ஆய்வு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சியில் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி நகராட்சியில் அண்ணா நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தின்கீழ் 153 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை கழிவுநீர் குழாய்கள் மற்றும் மேன்ேஹால் பணிகளையும், 21 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைநிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமானப் பணிகளையும் கலெக்டர் பத்மஜா ஆய்வு செய்தார்.
மேலும் கால்நடை பெருமருத்துவமனையில் அமைந்துள்ள தெரு நாய்களுக்கான அறுவை சிகிச்சைக் கூடம், நாய்கள் பராமரிப்பு கூடம் ஆகியவற்றை பார்வையிட்டு, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தார்.

