தார் விலை உயர்வால் சாலைப்பணியில் தொய்வு: நிறைவு செய்த பணிக்கும் பணம் கொடுக்கவில்லை, ஒப்பந்ததாரர்கள் வேதனை
சிவகங்கை:போரால் தார் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் மாவட்டத்தில் சாலை பணிகள் தொய்வு அடைந்திருப்பதாகவும், அதை பொருட்படுத்தாமல் சாலை அமைக்கும் பணியை செய்தாலும் பார்த்த வேலைக்கு தொகையை ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகம் தாமதப்படுத்துவதாகவும் ஒப்பந்ததாரரர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்கா இஸ்ரேல் ஈரான் நாடுகளுக்கிடையே போர் நடப்பதால் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. அதன் கழிவிலிருந்து கிடைக்கும் சாலை அமைக்க பயன்படுத்தப்படும் தாரின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால் ஒப்பந்தம் எடுத்த வேலைகள் அனைத்திலும் நஷ்டம் ஏற்படுகிறது.
கச்சா எண்ணெய்யைச் சுத்திகரிக்கும் போது கிடைக்கும் தாரின் விலை டன்னுக்கு ரூ.40 ஆயிரத்தில் இருந்து 90 ஆயிரம் வரை அதாவது 90 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால் சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர்கள் நெருக்கடியைச் சந்தித்து வரும்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்கவும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும் நஷ்டத்தை பொருட்படுத்தாமல் பார்த்த வேலைக்கும் 3 மாதங்களை கடந்து பார்த்த வேலைக்கான பில் தொகையை ஒதுக்காததால் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஒப்பந்ததாரர்கள் தெரிவிக்கின்றனர்.
