ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டு சென்றவர் வெட்டிக் கொ@லை- செங்கல்பட்டு பைபாஸில் அதிர்ச்சி
செங்கல்பட்டு மாவட்டத்தில் நீதிமன்றத்திற்குச் சென்று தமக்கு எதிரான ஒரு கொலை வழக்கிற்காகக் கையெழுத்திட்டுத் திரும்பிய வாலிபர் ஒருவர், பின்தொடர்ந்து வந்த பயங்கரக் கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் வீரா என்ற வீரமூர்த்தி கிருஷ்ணன் (26). இவர் உள்ளூரில் துரித உணவு கடை நடத்தி வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் ஆகாஷ் என்ற இளைஞர் அரிவாளால் வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில் வீரமூர்த்தி முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்திருந்த அவர், நீதிமன்ற நிபந்தனைப்படி செங்கல்பட்டு நீதிமன்றத்திற்குச் சென்று முறையாகத் தனது கையெழுத்தைப் பதிவு செய்துள்ளார். நீதிமன்றப் பணிகளை முடித்துவிட்டுத் தனது இருசக்கர வாகனத்தில் மீண்டும் வீட்டிற்குத் திரும்புவதற்காக வீரமூர்த்தி புறப்பட்டார்.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

