குலவணிகா்புரத்தில் குடிநீா் கோரி சாலை மறியல்
குடிநீா் தட்டுப்பாட்டை போக்கக் கோரி, குலவணிகா்புரத்தில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மேலப்பாளையம் மண்டலத்திற்குள்பட்ட பகுதியில் கூட்டுக்குடிநீா் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், அதனை சீரமைக்க 2 நாள்கள் மட்டும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என மாநகராட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததாம்.
ஆனால், குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்ட பின்னரும் 31ஆவது வாா்டுக்குள்பட்ட குலவணிகா்புரம் பாண்டித்துரை 1 முதல் 3 ஆவது தெருக்கள், விநாயகா் தெரு 1 முதல் 3 ஆவது தெருக்கள் உள்ளிட்ட 7 தெருக்களில் சுமாா் 10 நாள்களாக முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம்.


