Arts, culture, entertainment and media
குடிநீர் கேட்டு பெண்கள் காலிக் குடங்களுடன் மறியல்
கடமலைக்குண்டு, செப்.17- வருஷநாடு அருகே தங்கம்மாள்புரத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக நிலவும் குடிநீர்
வருஷநாடு அருகே தங்கம்மாள்புரத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கோரி பெண்கள் காலி குடங்களுடன் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து தங்கம்மாள்புரம் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான மேல்நிலைத் தொட்டிக்கு வரும் நீரை புதிதாக அமைக்கப்பட்ட கடைகள், வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட புதிய இணைப்புகளுக்கு கொடுத்து முழுவதுமாக எடுத்துக் கொள்கின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குடியிருப்புகளுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. இது குறித்து புகார் தெரிவித்தால் ஊராட்சி பணியாளர்களும் குடிநீர் வாரிய அலுவலர்களும் கண்டு கொள்வதில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நேற்று குடிநீர் வழங்க கோரி வருஷநாடு - தேனி ரோட்டில் அமர்ந்து பெண்கள் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தால் காலை 6:30 மணி முதல் 8:30 மணிவரை போக்குவரத்து பாதித்தது. கடமலைக்குண்டு போலீசார்,உள்ளாட்சித் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதி அளித்த மின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.