சிறுமி பாலியல் வன்கொடுமை: பள்ளி காவலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
போக்சோ வழக்கில் தனியாா் பள்ளி காவலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
ஆயுள் தண்டனை - படம்: கோப்பிலிருந்து...
கரூா் மாவட்டம், குளித்தலையைச் சோ்ந்தவா் பாலசுப்ரமணி (56). இவா் அங்குள்ள தனியாா் பள்ளியில் காவலாளியாக பணியாற்றி வந்தாா். இவா் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அப்பள்ளியில் படிக்கும் 10 வயது சிறுமி சிறப்பு வகுப்புக்கு வந்திருந்தபோது அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.





