சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை
விழுப்புரம்: 5 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபருக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
விழுப்புரம் அடுத்த திருவெண்ணெய்நல்லுாரை சேர்ந்தவர் மோகன்ராஜ், 37; இவர் கடந்த, 2022ம் ஆண்டு ஜன., 26ம் தேதி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த, 5 வயது சிறுமியிடம் பாலியில் சீண்டலில் ஈடுபட்டார்.
விழுப்புரம் மகளிர் போலீசார் போக்சோவில் வழக்குப் பதிந்து மோகன்ராஜை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வினோதா, குற்றம்சாட்டப்பட்ட மோகன்ராஜிக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 7000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்சம் ரூபாய் அரசு நிவாரணம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.