ஏரியில் சுத்திகரிப்பு செய்யாமல் கலக்கும் கழிவுநீர் பாசனத்திற்கு நீர் திறக்காததால் விவசாயிகள் கவலை
கெலமங்கலம்; கெலமங்கலம் பட்டாளம்மன் ஏரியில், சுத்தி-கரிப்பு செய்யாத கழிவு நீர் கலந்து, தண்ணீர் பச்சை நிறமாக மாறியுள்ளது. பாசனத்திற்கு கடந்த, 9 ஆண்டுகளாக நீர் திறக்காததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
.கிருஷ்ணகிரி மாவட் டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, கெலமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே, 30 ஏக்கர் பரப்பளவில் பட்-டாளம்மன் ஏரி உள்ளது. காருகொண்டப்பள்ளி, பைரமங்கலம், டி.கொத்தப்பள்ளி, காடு உத்தனப்-பள்ளி, அஞ்செட்டி துர்க்கம், குந்துமாரனப்பள்ளி பகுதிகளில் மழை பெய்யும் போது, பட்டாளம்மன் ஏரிக்கு தண்ணீர் வரும். கடந்த, 2017ம் ஆண்டு வரை, ஏரியில் இருந்து பாசனத்திற்கு குறிப்பிட்ட அளவு நீர் திறக்கப்பட்டது.கால்வாய் ஆக்கிரமிப்பு
அதன் பின், மதகு மேற்கு பாசன கால்வாய் ஆக்-கிரமிப்பு செய்யப்பட்டதால் கடந்த, 9 ஆண்டுகளாக பாசனத்திற்கு நீர் திறக்கப்படவில்லை. மாறாக ஏரியில் தண்ணீர் சேமிக்கப்பட்டு, மீன் பிடிக்க குத்தகைக்கு விடப்படுகிறது. பாசன கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, விவசாய பாசனத்-திற்கு நீர் வழங்க வேண்டும் என, முதல்வர் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர், தேன்கனிக்-கோட்டை தாசில்தார், ஓசூர் சப்-கலெக்டர் அலு-வலகத்தில், விவசாயிகள் மனு கொடுத்துள்ளனர்.