10 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த தையூர் பணிமனை திட்டம் தொடக்கம்
திருப்போரூர்:தையூர் ஊராட்சியில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் இருந்த பணிமைன திட்டம், 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது.
திருப்போரூர் வட்டம் கேளம்பாக்கம் அடுத்த தையூர் ஊராட்சியில் மாநகர போக்குவரத்து பணிமனை ஏற்படுத்தப்படும் என, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 2014ம் ஆண்டு, சட்டசபை கூட்டத் தொடரில், 110 விதியின் கீழ் அறிவித்தார்.
இதை கேளம்பாக்கம், திருப்போரூர், மாமல்லபுரம் பகுதி போக்குவரத்து தொழிலாளர்கள், வியாபாரிகள் சங்கத்தினர் வரவேற்றனர்.


