எல் நினோ தாக்கம்: ஊட்டியில் முன்கூட்டியே தொடங்கிய நீர் பனிப்பொழிவு
நீலகிரி,நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் நீர் பனிப்பொழிவு தொடங்கும். இந்த நீர் பனிப்பொழிவானது படிப்படியாக உறை பனிப்பொழிவாக மாறி, ஜனவரி மாத
நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் நீர் பனிப்பொழிவு தொடங்கும். இந்த நீர் பனிப்பொழிவானது படிப்படியாக உறை பனிப்பொழிவாக மாறி, ஜனவரி மாதம் வரை ஊட்டியில் உறைபனி தொடர்ந்து நீடிக்கும்.
ஆனால் நடப்பாண்டில் எல் நினோ தாக்கம் மற்றும் மழை இல்லாத காரணத்தினால் காலநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக ஊட்டியில் செப்டம்பர் மாதத்திலேயே நீர் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக காலை நேரங்களில் புல்வெளிகளில் நீர் பனிப்பொழிவால், முத்துமுத்தாக தண்ணீர் துளிகள் காட்சி அளிக்கின்றன. குறிப்பாக ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, காந்தல் உள்ளிட்ட சமவெளி பகுதிகளில் இந்த நீர் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது.

